( நூருல் ஹுதா உமர், கபூர் ஏ அன்வர்)
மருதமுனை ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் கலை கலாச்சார விழா பாடசாலையை அதிபரும், இளைஞர் சேவை அதிகாரியுமான எம்.டி.எம். ஹாரூன் தலைமையில் மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாசில் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, மட்டக்களப்பு மத்திய வலயத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.நியாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பி.எம். சிபான் மற்றும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்எம். ஜெஸ்மீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலையை விட்டு தரம் முதலாம் ஆண்டுக்கு சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் பேராசிரியர் உரையாற்றுகையில் அண்மைக் காலமாக எமது வலையத்தில் கல்வியில் பல சவால்களை எழுந்து கொண்டு வருவதை சுட்டிக்காட்டி இன்று பாலர் பாடசாலையை விட்டு விலகி தரம் முதலாம் ஆண்டுக்கு செல்லும் மாணவ செல்வங்களுக்கு அவர்களின் எதிர்கால கல்வியில் பல முன்னேற்றங்களை கண்டு அவர்கள் இந்த பிரதேசத்தில் மட்டுமல்லாமல் இந்த முழு நாட்டிற்கும் சிறந்த ஒரு பிரைஜயாக மிளிர வேண்டும் என்று வாழ்த்தி அவர்களை வழி அனுப்பி வைத்தார்.

Post a Comment
Post a Comment