(க.கிஷாந்தன்)
" நாங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. மக்களுக்கான அரசியலையே நடத்தி வருகின்றோம். இனியும் நடத்துவோம். இந்த ஆட்சி விரைவில் கவிழும். சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் நாங்கள் அமைச்சராக இருப்போம். மக்களுக்கு பல சேவைகளை வழங்குவோம்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் சூளுரைத்தார்.
இராகலை, வலப்பனை பிரதேச சபை மண்டபத்தில் இன்று (09.01.2022) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உடபுஸ்ஸலாவ, இராகலை, வலப்பனை போன்ற பகுதிகளில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்துடன் இன்றைய தினம் இணைந்து கொண்டனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு,
" நான் மக்களுக்காகவே அரசியல் செய்கின்றேன். மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் செய்வதில்லை. அப்படி செய்வதாக இருந்தால் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிவிட்டு சொகுசு வாகனங்களைப் பெற்றிருக்கலாம்.

Post a Comment
Post a Comment