அக்கரைப்பற்று தக்வா பள்ளிவாசலில் இரத்ததான நிகழ்வு



 



நூருல் ஹுதா உமர் 


அக்கரைப்பற்று தக்வா பள்ளிவாயல் எற்பாட்டில் இரத்ததான நிகழ்வு கடந்த சனிக்கிழமை (08) நடைபெற்றது. இதில் 231 இரத்த கொடையாளிகள் கலந்து கொண்டதிலிருந்து  202 நபர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர். ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சம்மேளன பிரதித்தலைவர் எம்.எம். ருக்ஸான் உட்பட சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.