-பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மிக ஆர்வம்



 


வி.சுகிர்தகுமார் 0777113659    




5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில் அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு முன்பாக பரீட்சையில் தோற்றுவதற்காக இன்று காலை  ஆர்வத்துடன் பெற்றோர்களுடன் மாணவர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.
 
இதேநேரம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு மதஸ்தலங்களில் மாணவர்களுக்கு ஆசி வேண்டி விசேட பு}ஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இறைவழிபாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்களின் ஆசியை பெற்றுக் கொண்டதுடன் பெற்றோர்களையும் வணங்கி பரீட்சை நிலையத்தினுள் நுழைந்ததையும் இங்கு அவதானிக்க முடிந்தது.

கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டபோதும் இம்முறை பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் காணப்பட்டதையும் பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தியதையும் இன்று அவதானிக்க முடிந்தது.