காசோலைகள் கையளிப்பு




(


 நூருல் ஹுதா உமர்)


கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் சகவாழ்வு மன்றங்களை ஸ்தாபிப்பதன் ஊடாக சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் ACTED நிறுவனத்துடன் இணைந்து ஒரு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் சகவாழ்வுக்கான ஆலோசனைக் குழுக்கள் நிறுவப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களிலும் இந்தத் திட்டங்களின் தலைமையாக செயல்படுகின்றன. அந்தவகையில், இறக்காமம் பிரதேச சபைக்கு உட்பட்ட இரண்டு சகவாழ்வு மன்றங்கள் ACTED நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இறக்காமம் - 04ம் பிரிவில் அமையப்பெற்றுள்ள ஹிக்மா மற்றும் ஹிஜ்ரா சகவாழ்வு மன்றங்களுக்கு எதிர்கால வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் நோக்கில் ACTEB நிறுவனத்தினால் முதற்கட்டமாக தலா ரூபா. 425,000.00 வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் ACTEB நிறுவனத்தின் சிரேஷ்ட செயற்திட்ட உத்தியோகத்தர் ஏ.எஸ். சஷான் முஹம்மட் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களினால் இறக்காமம் - 04ம் ஹிக்மா சகவாழ்வு மன்றத்தின் தலைவர் எம்.ஐ. பாயிஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. சகவாழ்வுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுப்பதற்கான அவர்களின் நிறுவன கருவிகள், பொதுமக்களை மையப்படுத்தி சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்களை இந்நிதி மூலம் செயற்படுத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் இறக்காமம் - 04ம் ஹிக்மா சகவாழ்வு மன்றத்தின் ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.