"போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் -பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை"





பாறுக் ஷிஹான்


போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(24) மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலானது நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் இடம்பெற்றதுடன் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அங்கு வருகை தந்தவர்களிடம் ஆக்கபூர்வமான கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.

மேலும் மேற்படி விடயம் தொடர்பாக கடந்த 23.02.2023 அன்று நிந்தவூர் பிரதேச சபை அமர்வின் போது நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடந்த காலங்களில் பொது அமைப்புகளினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் ஆராயப்பட்ட நிலையில் மேற்படி கலந்துரையாடலானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் இக்கலந்துரையாடலில் இப்பிரதேசத்தில் காணப்படும் சகல பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் அவசரமாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டன.

குறிப்பாக இப்பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பிற்கு நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளதாகவும் இக்கூட்டத்திற்கு அவர் வருகை தராது சிங்கள மொழி பேசும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை அவரது  பிரதிநிதியாக அனுப்பி இருந்தமை குறித்த கலந்தரையாடலில் ஒரு விமர்ச்னத்தை பொது நிறுவன அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்வைத்திருந்தனர்.


 மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழு தலைவர் மற்றும் பிர்தவ்ஸ்  ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் மற்றும் அல்ஹூதா ஜும்மா பள்ளிவாயலின் தலைவர் மற்றும் ரஹ்மானிய ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் மற்றும் ஜாமிஉத் தொளஹீத் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் மற்றும் இஸ்வா ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் மற்றும் இஸ்வா அமைப்பின் தலைவர் மற்றும் சித்தி விநாயகர் ஆலயதின் தலைவர் மற்றும் முத்து மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்   கலந்து கொண்டுள்ளனர்.