நூருல் ஹுதா உமர்
கத்தார் சகாபாக்கள் நூலக வெளியீட்டில் கவிஞர் புதுகை சிக்கந்தர் எழுதிய காயங்களின் கரும்பலகை என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வொண்டர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
கத்தார் சகாபாக்கள் நூலகத்தின் தலைவர் மணிகண்டன் ஐயப்பன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர் கத்தார் முத்தமிழ் மன்றம் ரெஜினா கோபால்சாமி, சட்டத்தரணி பட்டிமன்ற பேச்சாளர் கத்தார் முத்தமிழ் மன்றம் சிந்து தமிழ், எழுத்தாளர் பாத்திமா நிஸ்ரா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
கத்தார் காயிதே மில்லத் பேரவை தலைவர் முஹம்மத் முஸ்தபா நூலை வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கவிஞர் கொடிநகரான், ராமசெல்வம் (கத்தார் தமிழர் சங்கம்), குரு (கத்தார் முத்தமிழ் மன்றம்), விஜய் ஆனந்த் (பாரதி மன்றம்) , ஒருங்கிணைந்த தமிழர் பேரவை தலைவர் சமீர், செயலாளர் வலியுல்லாஹ், கத்தார் அயலக திமுக அணி துணைச் செயலாளர் மதன்குமார், ஸ்கை தமிழ் வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இது கவிஞர் புதுகை சிக்கந்தர் அவர்களின் இரண்டாவது நூலாகும்.
UMAR LEBBE NOORUL



Post a Comment
Post a Comment