கௌரவிக்கும் நிகழ்வு




 


வி.சுகிர்தகுமார் 0777113659


  அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்தில் புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்களுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களாக உயர்வு பெற்றிருக்கும் கல்வியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று மாலை அம்பாரை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாரை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் கலாபூசணம் கே.சந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான கே.கமலமோகனதாசன் மற்றும் திருமதி மாதுரி மயூரன் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி திரிசாந்தி கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக ஓய்வு நிலை அதிபர் வி.கனகரெத்தினம் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் பி.கே.சிவசர்மா ஆசிரிய ஆலோசகர் எம்.யோகராஜன் உள்ளிட்ட பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சுவாமி நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் அவர்களின் ஆசியுரையோடு ஆரம்பமான நிகழ்வில் அதிதிகளை வரவேற்று ஓய்வு நிலை அதிபர் பி.கிருஸ்ணபிள்ளை உரையாற்றினார். தொடர்ந்து தலைமையரையினை வழங்கிய அம்பாரை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் கலாபூசணம் கே.சந்திரலிங்கம் தமது கழகத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் இதற்காக உதவிக்கரம் நீட்டியுள்ள புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்பு தொடர்பிலும் நன்றி கூறினார்.

கே.சந்திரலிங்கம் தமது கழகத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் இதற்காக உதவிக்கரம் நீட்டியுள்ள புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்பு தொடர்பிலும் நன்றி கூறினார்.


புpன்னராக கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய மாணவிகளின் வரவேற்று நடனமும் இடம்பெற்றதுடன் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் சுவாமி ஜீ உள்ளிட்ட அதிதிகளால் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அக்கரைப்பற்று கோளாவில் மண்ணில் பிறந்து கல்வி துறையில் பல சாதனைகள் படைத்து திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் உயர்வு பெற்று மண்ணிற்கு பெருமை சேர்த்த கே.கமலமோகனதாசன் மற்றும் திருமதி மாதுரி மயூரன் ஆகியோரின் சேவையினை பாரட்டிய வாழ்த்துப்பாவினை இயற்றி வழங்கிய ஓய்வு நிலை அதிபர் வி.கனகரெத்தினம் வாசித்தளிக்க  சுவாமி உள்ளிட்டவர்களினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே.கமலமோகனதாசனின் ஏற்புரையினை அடுத்து அம்பாரை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளர் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மாதவன்பிள்ளையின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது. TV