மரநடுகை


 


நூருல் ஹுதா உமர்


தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது  பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரையோர பிரதேசங்களில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் மரநடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக பொறியியலாளர் எம்.சி .கமால் நிஸாத் அவர்களும், அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா , நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட் , கரையோர பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.நுஸ்ரத் அலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக சாய்ந்தமருது  ஹெப்பி கிட்ஸ் ஹோம் முன் பாடசாலை வளாகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் மரநடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எஸ்.டி.சுதாகரன், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை. திருப்பதி, சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்பீக், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எப்.சுமையா பானு,  ஹெப்பி கிட்ஸ் ஹோம் முன்பாடசாலை தலைமை ஆசிரியை ஜூனைதா மசூத், ஹேப்பி கிட்ஸ் ஹோம் முன்பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.