வி.சுகிர்தகுமார் 0777113659
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால்
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர்சபை உறுப்பினராக பியசேன கிருத்திகன் நியமிக்கப்பட்டுள்ளார்..
முன்னதாக நீர் வழங்கள் அமைச்சரின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளராக கடைமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது…
நியமனத்தின் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்
கெளரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாண் அவர்களுடன் இணைந்து மக்கள் பணி ஆற்றுவதற்குக்குரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது..
அவர் எமது மாகாணத்தை நேசிக்கின்ற ஒரு சிறந்த ஆளுநர் ஆவார்…
கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமனம் பெற்றது எமது அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழர் பிரதேசத்திற்கு என்னால் இயலுமான சேவையை மக்களுக்கு ஆற்றுவதற்காகவே..!
இந்தியாவின் நிதிப்பங்களிப்புடன் எதிர்காலத்தில் எமது மாவட்டத்திலும் வீடற்றவர்களுக்கு வீடமைப்பு திட்டங்கள் கொண்டு வருவதற்குரிய கலந்துரையாடல்களை முன்னெடுக்வுள்ளேன்…என்றார்.


Post a Comment
Post a Comment