இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை




 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் #இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை 

====================================


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளது 


பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான்  கடந்த 2018 முதல் 2022 வரை பாக்கிஸ்தானின் பிரதமர் பதவியில்  இருந்த காலப் பகுதியில் தனது பிரதம மந்திரியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, வெளிநாடுகளுக்குச் சென்றபோது கிடைத்த பரிசுப் பொருட்களையும், 140 மில்லியன் பாக்கிஸ்தான் ரூபாய் ($635,000) மதிப்புக்கும் அதிகமாக அரசு உடைமைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட் நிலையில் 


தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் போது காரில் வைத்து இம்ரான்கான் கான் கைது செய்யப்பட்டதாக இம்றான் கானின் வழக்கறிஞர் தகவல் வெளியீட்டுள்ளார்.


தமிழில்

As-sheikh Hafeesul haq (Fathih institute for Higher Education)