சம்பியனானது றஹீமிய்யா விளையாட்டுக் கழகம்.
(எஸ். சினீஸ் கான்)
பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக் கழகம் ஏற்பாட்டில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிரிகெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு றஹீமிய்யா விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
32 விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொண்ட இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று (7) இடம்பெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாலமுனை அறபா விளையாட்டுக் கழகம் ஜந்து ஓவர்கள் முடிவில் 49 ஓட்டங்களை பெற்றது. அதனை எதிர்த்தாடிய றஹீமியா அணி 4.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.


Post a Comment
Post a Comment