சுதந்திர தினத்தில், சுஹாசினியின் கலையுலக வாழ்வு சிறக்கட்டும்!




 

அருக்காணி =சுஹாசினி மீசை இல்லாத பாரதி=சுஹாசினி மக்கள் மனதில் நின்ற பெண்...சுஹாசினி 1961 ம் வருடம் ஆகஸ்ட் 15 ம் தேதி பரமகுடியில் பிறந்தார்.. இவரது அப்பா சாருஹாசன் என்பது எல்லோருக்கும் தெரியும்.. சாருஹாசன் யார் என்று யாருக்காவது தெரியாது என்றால்... உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன்.. சுஹாசினி என்பவரே யாருக்காவது தெரியாது என்றால் 😀 அவர் டைரக்டர் மணிரத்னத்தின் மனைவி.. பண்ணிரன்டு வயதுவரை பரமகுடியில் படித்தவர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.. ஒரு பக்கம் படித்துகொண்டிருந்தாலும் சினிமா சம்பந்தபட்டவர்கள் வீடுமுழுக்க நிரம்பியிருக்கும் போது கவனம் தானாக அந்த பக்கம் திரும்புவது இயல்புதானே முதலில் இவருக்கு வழங்கப்பட்ட பணி கமலுக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவது...ரசிகர்களின் போன்கால்களை Attend செய்வது கமல் போட்டோவை கவரில் வைத்து போஸ்ட செய்வது...😀 என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் உறவுகள் பலமாக இருந்த காலம் அது.. அடுத்த கட்ட நகர்வாக அவரது அப்பாவிடம் இருந்த ஒரு கேமரா அவரை கண்சிமிட்டி அழைத்தது அந்த சாதாரண கேமரா மூலம் சுஹாசினி எடுத்த புகைப்படங்கள் அனைவரின் பாராட்டை பெற்றது..😐 பாராட்டு தந்த உற்சாகமும் அவரது சுயஅறிவும் சேர்ந்து திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என்று அவரை முடிவெடுக்க வைத்தது.. ஒளிப்பதிவாளர் அடையாளத்தோடு வலம் வந்த சுஹாசினியிடம் நடிப்பு ஆசையும் இருப்பது கண்டுபிடிக்க பட்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமானார்.. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அதில் குறிப்பிட தகுந்தவை தாய்வீடு, சிந்துபைரவி,கோபுரங்கள் சாய்வதில்லை,என் பொம்முகுட்டி அம்மாவுக்கு,மனதில் உறுதி வேண்டும்,தர்மத்தின் தலைவன் இதில் சிந்துபைரவி படத்துக்காக தேசிய விருதும் பெற்றார் 😐 மனதில் உறுதி வேண்டும் படத்தின் கதை பாலசந்தரால் இவருக்காகவே உருவாக்க பட்டது ஒளிப்பதிவாளர் கனவோடு வந்தவர் நடிகையாகி விட்டாலும் அந்த ஆசையை திருமணத்திற்கு பின் இந்திரா என்ற படத்தை இயக்கி நிறைவேற்றி கொண்டார் . இந்த படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் சுஹாசினியின் ஆலோசனைபடியே அவர் செயல்பட்டுள்ளார் 😀 பல்துறை வித்தகரான சுஹாசினிக்கு ஜீனியஸ் மணிரத்னம் கனவராக அமைந்தது இயற்கையான மற்றும் சிறப்பான ஒன்று.. ஆகஸ்ட் பதினைந்தில் பிறந்ததாலோ என்னவோ அவருக்கு சுதந்திர உணர்வு அதிகம் இவரை போன்றவரை ஜீனியஸ் மணிரத்தினத்தால் மட்டுமே கட்டிமேய்க்க முடியும் என்பது தின்னம்