தேசிய பாதுகாப்பு தினம்





( வி.ரி.சகாதேவராஜா) 

உலகை உலுக்கிய சுனாமி அனர்த்தத்தினை நினைவு கூரும்  தேசிய பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது ஏற்பாடு செய்த பிரதான நிகழ்வானது நேற்று முன்தினம்(26.12.2023) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் இடம் பெற்றது.

இதனை முன்னிட்டு  அனர்த்தங்களில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து  மக்களுக்காக  பிரார்த்தனை செய்யும் நிகழ்வு
இவ்வாறான இழப்புக்களிலிருந்து  பாதுகாப்பு பெறுவது தொடர்பான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு. எதிர்காலத்தில் சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு  பெறுவதற்கான தயார்ப்படுத்தலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இந் நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ சேவை அபிவிருத்தி உத்தியோகத்தரினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

 விசேட நிகழ்வாக மரநடுகை நிகழ்வும்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது பொதுமக்கள், ஆலய பரிபாலன சபையினர், கிராம/மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்,  விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.

 இதில் விசேட அம்சமாக பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆலயங்களில் விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.