தராவீஹ் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது? தாக்குதல்








#India.
அகமதாபாத்: குஜராத்தில் பல்கலைக் கழக விடுதியில் தொழுகை நடத்திய வௌிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அகமதாபாத்தில் குஜராத் அரசு பல்கலைக் கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை உள்பட பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களில் 75 சதவீதம் பேர் பல்கலைக் கழக விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த வௌிநாட்டு மாணவர்கள் ரமலான் நோன்பையொட்டி நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விடுதி வளாகத்துக்குள் நுழைந்த 25 பேர் அடங்கிய குழுவினர் தொழுகை செய்து கொண்டிருந்த மாணவர்களை தடுத்து, மசூதிக்கு சென்று தொழுகை நடத்துமாறு கூறினார்.

தொடர்நது வௌிநாட்டு மாணவர்கள் மீது கற்களை வீசி அந்த குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த இலங்கை மற்றும் தஜிகிஸ்தானை சேர்ந்த 2 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.