வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 38வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று திருக்கோவில் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது .
இறுதிப் போட்டியில் திருக்கோவில் சூப்பர் ஸ்டார் அணியும் விநாயகபுரம் மின்னொளி அணியும் மோதின.
இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டி இரவு 10:30 மணி அளவில் நிறைவுக்கு வந்தது.
இந்த போட்டியில் சூப்பர் ஸ்டார் அணி தண்டனை உதை மூலம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இந்த போட்டிக்கு திருக்கோவில் பிரதேச சபையின் எதிர்கால தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் வெற்றி பெற்ற சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு சாம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார். இரண்டாவது இடத்தை பெற்ற விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகத்தினையும் அவர் பாராட்டி இருந்தார்.


Post a Comment
Post a Comment