2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 செஸ் உபகரணங்களை வாங்கி விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இலங்கை விளையாட்டு சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகள் என கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
அதன்படி, முன்னாள் வர்த்தகர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.


Post a Comment
Post a Comment