1970களிலும் 80களிலும் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் காலமானார். மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் இவர்.
தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் சென்னையில் இன்று (மே 29) காலமானார். அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலை 8.15 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராஜேஷிற்கு இன்று காலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜேஷின் மனைவில் கடந்த 2012ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ், தொடர்ந்து கவனத்தை ஈர்க்கத்தக்க, அழுத்தமான பாத்திரங்களில் திரையில் தோன்றினார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த அவர், டப்பிங் குரல் கலைஞராகவும் திகழ்ந்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
பாம்புகள், ஊர்வன, அரிசோனா, ராட்டில்ஸ்னேக்
அமெரிக்காவில் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும் ஒலி விரியன் பாம்புகளை காக்க முயலும் தன்னார்வலர்கள்
2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்
வெளிநாட்டு வீரர்கள் வெளியேறியதால் பிளேஆஃப் சுற்று எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்? ஓர் அலசல்
இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் சாயலில் ஹிட் கொடுத்த 10 இசையமைப்பாளர்கள்
ராஜாவின் காலம் தான் ஆனால், ராஜா பாட்டு இல்லை - இளையராஜா சாயலில் ஹிட் கொடுத்த 10 இசையமைப்பாளர்கள்
சென்னை விமானம், லேசர் ஒளி
சென்னையில் தரையிறங்கும் விமானத்தில் பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி - இதன் விளைவுகள் என்ன?
End of அதிகம் படிக்கப்பட்டது
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நடிகர் ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம்தான் அவரது முதல் படம் என்றாலும், கே. பாக்கியராஜ் இயக்கிய 'கன்னிப் பருவத்திலே' படத்தில்தான் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார்.
'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும், அந்தப் பாத்திரம் இவருக்கு ஒரு மறக்க முடியாத பாத்திரமாக அமைந்தது.
2024ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி - காத்ரீனா கைஃப் நடித்து வெளிவந்த 'மெர்ரி கிறிஸ்மஸ்' திரைப்படம்தான் இவர் நடித்து வெளியான கடைசித் திரைப்படமாகும்.
நடிகர் ராஜேஷ் காலமானார் பட மூலாதாரம்,SOCIAL MEDIA
படக்குறிப்பு,நடிகர் ராஜேஷ்
ஆசிரியராக இருந்தவர் நடிக்க வந்தது எப்படி?
1949ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வில்லியம்ஸ் - லில்லி கிரேஸ் தம்பதியின் மகனாகப் பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்யவில்லை.
சில காலம் சென்னையில் ஆசிரியராகப் பணிபுரிந்த அவருக்கு 1974ல் 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக யூ டியூபில் தனது அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துவந்தார்.


Post a Comment
Post a Comment