(வி.ரி.சகாதேவராஜா)
தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் SuRaLa எனும் கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் action unity lanka (AU Lanka) வுடன் இணைந்து தாராள உள்ளங்கள் அறக்கட்டளை யினால் கல்முனை அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது,
அறக்கட்டளையின் தலைவர் ஜெ.ஜெயப்பிரகாஷ் தலைமையில் நேற்று(14) புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ஜெ.அதிசயராஜ் சிறப்பதிதிகளாக கல்முனை பிரதி கல்விப்பணிப்பாளரும் காரைதீவு கல்முனை தமிழ்பிரிவு கோட்டாக்கல்விப் பணிப்பாளருமாற ஆ. சஞ்ஜீவன் , முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் , கல்முனை HNB முகாமையாளர் என்.அரவிந்தன் , மற்றும் கௌரவ அதிதியாக AU Lanka கிழக்கு மாகாண தலைமை நிர்வாக அதிகாரி கே.கஜேந்திரன் அவர்களும் மற்றும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் நிருவாக உறுப்பினர்கள், AU Lanka நிருவாக உறுப்பினர்கள் SuRaLa திட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் AU Lanka கல்முனை அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது


Post a Comment
Post a Comment