(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் ஆகிய நான்கு பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் இன்று இங்கு விஜயம் செய்ய விருக்கும் எமது கட்சியின் தலைவர் சிவஞானம் மற்றும் செயலாளர் சுமந்திரனிடம் இதனை சமர்ப்பித்து கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
பெரும்பான்மையாக முடிவெடுத்திருக்கிறார்கள் .
ஆலையடிவேம்பில் முதல் இரண்டு வருடங்கள் எமது கட்சியின் உறுப்பினர் தவிசாளராக இருப்பார், உப தவிசாளராக சுயேட்சை அணியின் தலைவர் இருப்பார் . அவரை எமது கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டு அடுத்த இரண்டு வருட காலத்தில் அவர் தவிசாளராக கடமை ஆற்றுவார் .எமது கட்சியைச் சேர்ந்தவர் உபதவிசாளராக கடமை ஆற்றுவார் .
நாவிதன்வெளி பிரதேச சபையில் எமது உறுப்பினர் தவிசாளராகவும்
சுயேச்சை அணியின் தலைவர் உப தவிசாளராகவும் கடமை ஆற்றுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டிருக்கின்றது .
பொத்துவில் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவிசாளராகவும், எமது உறுப்பினர் உபதவிசாளராகவும் இயங்குவதற்கு உடன்பாடு. எட்டப்பட்டிருக்கின்றது.
எது எவ்வாறு இருப்பினும் இந்த உடன்பாடுகள் இன்று இங்கு விஜயம் செய்ய உள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் செயலாளர். சுமந்திரன் ஆகியோரிடம் கலந்துரையாடிய பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்


Post a Comment
Post a Comment