டிரம்ப் - மஸ்க் மோதல்: மிகப்பெரிய நெருக்கடியில் நாசா - 40 திட்டங்கள் நிறுத்தப்படும் ஆபத்து





 டொனால்ட் டிரம்புக்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையிலான மோதலின் எதிரொலி, நாசாவின் பட்ஜெட் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

டிரம்பின் "பிக், பியூட்டிஃபுல்" மசோதா தொடர்பாக, அவருக்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியுள்ளது.

நாசா தனது புதிய பட்ஜெட் திட்டத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் அறிவியல் திட்டங்களுக்கான நிதி கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது மேம்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் அல்லது ஏற்கனவே விண்வெளியில் இருக்கும் அறிவியல் பயணங்கள் என கிட்டத்தட்ட நாற்பது திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளன.