(பாறுக் ஷிஹான்)
இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களமும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்ப்போர் கூடத்தில்திங்கட்கிழமை(16) இடம்பெற்றது.
“முன்னேற்றம் பெற்றுள்ள இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில் முனைவோர் செயற்பாடுகள், கலாசாரம், புதுமை, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலமாக சமூக மாற்றமும் பொருளாதார மேம்பாடும்” (Social Transformation and Economic Upliftment through Entrepreneurship, Culture, Innovation, and Export Promotion in the Digital Era (ICEIEDE–2025)) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டில் ஆரம்ப நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளரும் இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியருமான கலாநிதி வி.ஆர் பழனிவேலு சிறப்பு உரையாற்றினார்.
கலாநிதி வி.ஆர் பழனிவேலு, கலாநிதி டி. ஸ்ரீவித்யா, கலாநிதி எஸ். நந்தினி, சேலம் ஜிஹான் டிராவல்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ்ணு மனோஜ், வி.பி. கவுரந்த், பி. கவினா, கே.எஸ். சௌந்தர்யா, எல். மொனிஷா, கலாநிதி ஆர். இரமேஷ், கலாநிதி கே. மணிமேகலை, எஸ்.பி. ஸ்ரீவித்யா, என்.எஸ். பிரகாஷ், தி விஜயலட்சுமி பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் வருகைதந்து கலந்துகொண்டனர்.
நிகழ்வின்போது கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.


Post a Comment
Post a Comment