பாறுக் ஷிஹான்
கடந்த வெள்ள அனர்த்ததினால் வீடுகள் தொழில் ரீதியாக பாரியளவில் பாதிக்கபட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்குகின்ற நிகழ்வு திங்கட்கிழமை(16) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆசீக் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கைக்கமைய கடந்த வெள்ள அனர்த்ததினால் வீடுகள் தொழில் ரீதியாக பாரியளவில் பாதிக்கபட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக இவ்இழப்பீடு தொகை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக கிராம உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment