மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதியரசர்களை நியமிப்பதற்கு,அனுமதி





 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.



அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பிராங்க் குணவர்தன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது.



இந்த நியமனங்கள், பிரதம  நீதியரசர் முர்து பெர்ணான்டோவின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டன.

 


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான அரசியலமைப்புப் பேரவை, சமீபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த நியமனங்களுக்கு தனது அனுமதியை வழங்கியது.