'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'



 


பாறுக் ஷிஹான்


ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூரில் 2ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு  திங்கட்கிழமை(9)  இடம்பெற்றது .

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான ஏ. ஆதம்பாவா இந்த வீடுகளுக்கான அடி கல்லை   நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர்,  தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம் எல் சம்சுன் அலி,, ஏ இப்திகார் அஹமட், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆசிரியர் எஸ் எம் ஆரிப் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி  குழுவின் தலைவருமான ஏ .ஆதம்பாவா எம். பி அவர்களின் முயற்சியினால் *உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் தலா பத்து லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்