மன்றில், இன்று





வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்பவர் சட்டவிரோதமாக ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


குறித்த வழக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது,பிரதிவாதியான டபிள்யூ. எம். அதுல திலகரத்னவும் அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் இருந்தார். 

அவர் தொடர்ந்த மற்றொரு வழக்கு முடிவுக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி சார்பாக ஆஜரான மூத்த சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, தனது கட்சிக்காரரான பிரதிவாதி டபிள்யூ.எம். அதுல திலகரத்ன சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதாக திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த நேரத்தில் பிரதிவாதியான அதுல திலகரத்னவும் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்படுவதாகவதாக சட்டத்தரணி குறிப்பிட்டார். 

சட்டத்தரணி பேசிக் கொண்டிருக்கும்போது, ​​பிரதிவாதியான அதுல திலகரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் இருந்த திறந்த நீதிமன்ற அறையில் கையை உயர்த்தி, தான் நீதிமன்றத்தில் இருப்பதாக நீதவானிடம் தெரிவித்தார். 

பிரதிவாதியான அதுல திலகரத்னவின் சட்டத்தரணி சுரங்க மொஹோட்டி, தனது கட்சிக்காரர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள HC/69/2018 வழக்கிலிருந்து சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதால் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இருப்பினும், பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்தார். 

பிரதிவாதியின் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, வெசாக் பௌர்ணமி தினத்தன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பட்டியலில் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரியின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.