பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்
கொழும்பு பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் குறும்படத் தயாரிப்பாளருமான பாத்திமா ஷானாஸ் இனால் தயாரித்தளிக்கப்பட்ட “எழுதப்படாத வசனங்கள்” எனும் 15 நிமிட குறுந்திரைப்படத்தை திரையிடலும் அதுதொடர்பில் கருத்தாடல் நிகழ்வும் 2025.06.11 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் கூட்ட மண்டபத்தில் பல்கலைகழக சமூக நல்லிணக்க நிலையத்தின் தலைவரும் அரசியல் விஞ்ஞான துறையின் தலைவருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.
கலை பொதுக்கருத்தாடல் பிரிவின் ஆலோசகர் ஏ.சி.எம். மாஹிர் மற்றும் , சிறகுநுனி கலை ஊடக மையத்தின் பணிப்பாளர் எம்.ஐ. ஜாபீர் ஆகியோரது நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த திரைப்படம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகத்தினாலும் கூட்டாக நிதியளிக்கப்படும் இலங்கையில் சமூக ஒத்திசைவையும் சமாதானத்தையும் வலுப்படுத்தும் (SCOPE) நிகழ்ச்சித்திட்டத்தின் பங்காண்மையுடன், சிறகுநுனி கலை ஊடக மையம் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலைத்துடன் இணைந்து இந்நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
SCOPE நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை அரசாங்கத்தடன் இணைந்து GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர், மற்றும் பேராசிரியர்கள், சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment