நூருல் ஹுதா உமர்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கு அமைவாக கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜி. முகம்மது றிஷாத் அவர்கள் தலைமையில் சிரமதானப் பணிகள் நடைபெற்றது.
இதன்போது பாடசாலை வளாகம் முற்று முழுதாக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் சிரமதானம் செய்யப்பட்டு செப்பனிடப்பட்டது.
மேலும் அலங்கார மரங்களுக்கான சொட்டுநீர் பாய்ச்சல் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான வேலைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.


Post a Comment
Post a Comment