ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச தெரிவு.....
ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது இத் தெரிவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவாகினார்......
மேலும் ஆலையடி வேம்பு பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டி இன்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது தவிசாளராக தெரிவாகி இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஆ.தர்மதாச அவர்கள் ஊடகங்களூக்கு கருத்து தெரிவிக்கையில் ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துடன் குறித்த பிரதேசத்தின் ஊழல் அற்ற அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதுடன் மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என அவர்தெரிவித்தார்.....
மேலும் குறித்த நிகழ்வானது கிழக்கு மகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் MR.ALM.AZMI தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment