நூருல் ஹுதா உமர்
"Food safety is everyone's business" என்ற தொனிப்பொருளில் உலக உணவு பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவு - 01 மற்றும் 02 ஆகியவற்றில் உள்ள உணவு கையாளும் நிறுவனங்கள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரீன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். அஸ்லம் மற்றும் பீ. விபூஷண் முதலானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பல குறைபாடுகள் கண்டறியப்பட்டு சில குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சில உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் பொதுச் சுகாதாரத்துக்கு பொருத்தமான வகையில் உணவு தயாரிப்பது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் தேவையான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..


Post a Comment
Post a Comment