கௌரவித்தலும்; நன்றி நவில்தலும் !



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இருந்து க.பொ.த (ச/த) 2024 (2025) பரீட்சைக்கு தோற்றி 34 "9A", 15 "8AB" சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை கௌரவித்தல், மாணவிகளினால் ஆசிரியர்களுக்கு நன்றி நவில்தல் நிகழ்வானது கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களும், கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிமனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் அவர்களும் கலந்து கொண்டனர்.

சாதாரண தரத்தில்  வரலாற்று சாதனை படைத்த  மஹ்மூத் பாலிஹா மாணவிகள் கல்லூரி முன்றலில் பூ மாலை  அணிவிக்கப்பட்டு இசை வாத்தியங்கள் முழங்க சாரணிய முதலுதவி அணிவகுப்பு மரியாதையுடன்
அழைத்து வரப்பட்டதுடன் அரங்கின் முன்னிலையில் மாணவிகளின் சுய அறிமுகம், வகுப்பாசிரியர், ஆசிரியர்கள் நினைவு ௯ர்ந்து  நன்றிகள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மஹ்மூத் பாலிகாவின் 54 வருட கால பதிவுகளில் முதற்தடவையாக இவ் ஆண்டின் 34"9A" விசேட சித்தி, சொக்லெட் பாரம்பரியத்தை இல்லாமல் செய்து அனைத்து மாணவிகளும் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்த மையானது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தன.

இந்நிகழ்வில் பிரதி, உதவி அதிபர் கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.