பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பியும் அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கும், இன்று மீண்டும் மோதினர். இரு ஆட்டங்கள் கொண்ட இறுதி சுற்றில் நேற்றைய போட்டி டிரா ஆனது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். இதில் வெற்றி பெற்ற திவ்யா சாம்பியன் ஆனார்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதினர். இதுவே இந்திய சதுரங்க வரலாற்றில் முக்கிய சாதனை தான். ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை.
ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இறுதிப்போட்டியில் பங்கேற்று 19 வயதான திவ்யா தேஷ்முக் சாதனை படைத்துள்ளார்.
கொனேரு ஹம்பி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கேண்டிடேட்ஸ் தொடருக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர் தான்.


Post a Comment
Post a Comment