ஆவணி சதுர்த்தி




(சுகிர்தகுமார்)   


 அக்கரைப்பற்று  கோளாவில்  அறுத்த நாக்கொட்டீஸ்வரர் என அழைக்கப்படும் ஸ்ரீ விக்னேஸ்வரப் பெருமான் மற்றும் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயங்களில் வருடாந்த ஆவணி சதுர்த்தி மகோற்சவப் பெருவிழாவின் தீர்த்தோற்சவங்களும் விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடுகளும் இன்று (27) இடம்பெற்றது.
 மூர்த்தி,தலம்,தீர்த்தம்,விருட்சம் ஆகிய சிறப்பியல்புகளை கொண்ட ஆலுயங்களில் வருடாந்த ஆவணி சதுர்த்தி மகோற்சவப் பெருவிழாவின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.
தீர்த்தோற்சவ தினமான இன்று காலை பொற்சுண்ணம் இடிக்கப்பட்டதன் பின்னர் கொடிமரப்பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கும் விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன்  பின்னர்;
எழுந்தருளிய விநாயகப்பெருமான் அலங்கரி;ங்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்தப்பட்டு ஊர்வலமாக பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ சமுத்திர தீர்த்தோற்சவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்பு ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் அமர்த்தப்பட்ட விநாயகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகப்பெருமானின் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆலயத்தலைவர்கள்  தலைமையில் இடம்பெற்ற கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுருமார்கள் சிவஸ்ரீ க.கு.கௌரிசங்கர் குருக்கள் மற்றும் சிவஸ்ரீ கஜமுகசர்மா உள்ளிட்ட தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைத்தனர்