பிரசவ அறையில் உறவினர்



 


பிரசவ அறையில் உறவினர் உடனிருப்பதால் கற்பிணித் தாய்மார்களுக்கு உளத் திடம் அதிகரிக்கும்  வகையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அறிமுகம்


காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்  நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட மகப்பேற்றுப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 


மகப்பேற்றின்போது கர்ப்பிணித் தாயின் நெருங்கிய உறவினர் ஒருவர் பிரசவ அறையில் உடனிருப்பது தாயின் மன நலத்திற்கும், பிரசவத்தின் சுமூகமான போக்கிற்கும் பெரிதும் உதவும். பிரசவ வலி மற்றும் மகப்பேறு என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான மற்றும் உணர்வுப்பூர்வமான தருணம். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், நெருங்கிய உறவினர் உடனிருந்தால், அவர்களுக்கு மன தைரியம், ஊக்கம் மற்றும் ஆறுதல் கிடைப்பதுடன், பாதுகாப்பாகவும் உணர்வார்கள். அத்தோடு,  சிறந்த வசதிகளுடன் கூடிய இந்த முன்மாதிரி மகப்பேற்று பிரிவு, வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

பிரசவ அறையில் கர்ப்பிணித் தாயின் தாய், சகோதரி அல்லது மாமி யாராவது ஒருவர் உடன் இருக்க முடியும்.