(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா
மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலம் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
அதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம் பழமையான பாலத்தை உடைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது.
அதனோடு ஒட்டியதாக தற்காலிக உப பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப் பழமை வாய்ந்த இப் பாலம் இறுதி காலகட்டத்தில் எப்போது விழும்? என்ற அபாய நிலையில் இருந்ததை ஊடகங்கள் தொடக்கம் பலரும் பல கூட்டங்களிலும் கூறி இருந்த பொழுதும் அது கடந்த பத்து வருட காலம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இதேபோன்று காரைதீவில் மேலும் நான்கு பாலங்கள் இருக்கின்றன .


Post a Comment
Post a Comment