தேசிய லொட்டரி, சபையின் முன்னாள் இயக்குநர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வழக்கறிஞர் ஒருவரை கைது செய்வதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு குற்றப்பிரிவுக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹண அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் சாலிய பீரிஸ், தனது வாடிக்கையாளரைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.
தனது வாடிக்கையாளர் துசித ஹல்லோலுவவுக்கு தொழில்முறை சட்ட சேவைகளை மட்டுமே வழங்கியதாகவும், எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.
அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது, இது 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.


Post a Comment
Post a Comment