கரூர் சம்பவம் - உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்தார் விஜய்



 


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனி அறைகளில் த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

 

 

தொடர்ந்து அவர்களின் மருத்துவ செலவு, கல்வி செலவு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.