(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் செயலாளராக யூ.எல்.ஏ.மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார் .
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் முன்னிலையில் அவர் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னர் செயலாளராக இருந்த கிதிர் மொகமட் ஓய்வு பெற்றதன் விளைவாக ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இப் பதில் நியமனம் மேற்கொள்ள பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment