பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைய 24 மணித்தியாலங்களும் தாம் தயார் நிலையில்



 


ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்      


 வெள்ள அனர்த்த நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைய 24 மணித்தியாலங்களும் தாம் தயார் நிலையில் இருப்பதாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம்
சசிகுமார் தெரிவித்தார்.
பிரதேச சபையுடன் இணைந்து பிரதேச செயலகம் இராணுவத்தினர் பொலிசார் இலங்கை மின்சார சபை வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அரச திணைக்களங்கள் இணைந்து வெள்ள அனர்த்த நிலையில் மக்களது தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
திருக்கோவில் பிரதேசத்தின் பழமையான பாரிய புளியமரமொன்று வீதியின் குறுக்காக வீழ்ந்த நிலையில் அதனை உடனடியாக அகற்றும் பணியை அனைத்து திணைக்களங்களுடன் இணைந்து முன்னெடுத்தோம்.
இன்னும் சில மரங்கள் விழும் நிலையில் உள்ளதுடன் வீதிகளிலும் வெள்ளம் வடிந்தோடுகின்றது.
இருப்பினும் இவற்றையெல்லாம் முறையாக கையாண்டு வருகின்றோம்.
இடம்பெயர்வுகள் இல்லாவிட்டாலும் அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் பிரதேச செயலகத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளோம்.
இருப்பினும் மக்களின் குறைபாடுகளை பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.