இவ்வாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.நாட்டு மக்களுக்கான விசேட உரையொன்றை ஆற்றிய அவர் மேலும் கூறியதாவது,
நாட்டின் சவால் மிக்க இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளோம்.ஒரே நேரத்தில் நாட்டையே இன்னலுக்குள்ளாக்கிய சம்பவம் இது.இந்த சவாலை நாங்கள் வெற்றிகொள்ள வேண்டும்.இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எங்களுக்கு இலக்கமல்ல.அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுகிறோம்.அந்த குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்.காணாமல் போனவர்கள் கூட உயிரோட இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
மீளக்கட்டியெழுப்புதல் பணியை நாங்கள் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.அனர்த்தம் பெரிய இழப்பை தந்துள்ளது.ஆனாலும் எமது நாட்டு மக்கள் இப்படியான துன்பங்களை சந்தித்து மீள் எழுச்சி பெற்று வந்துள்ளார்கள். முப்படையினரும் பொலிஸாரும் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளும்நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியவவை.
எமது இந்த செயற்பாடுகளுக்கு அண்டை நாடுகள் பெரிதும் உதவ முன்வந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் செயற்பாடுகள் நடந்துகொண்டுள்ளன.அனைத்து துறைகளிலும் இந்த அனர்த்தம் தாக்கத்தை செலுத்தியுள்ளதால் அவற்றை கட்டியெழுப்ப வேண்டும். அவசர கால சட்டம் இந்த அனர்த்தத்திற்கு தேவையான வகையில் பயன்படுத்தப்படுமே தவிர அது வேறெந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட மாட்டாது. நாடு முன்னர் இருந்த நிலைக்கு கொண்டுவரப்படும்.வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் எமக்கு உதவ முன்வந்துள்ளனர். வலுவான நிதியமொன்றை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
எமக்கு உதவ முன்வந்துள்ள நாடுகள் ,அமைப்புகளுக்கு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.அரசியல் பேதங்களை மறந்து இன ,மத பேதமின்றி நாம் ஒன்று சேர்ந்து செயற்படுவோம்.நாட்டை கட்டியெழுப்பிய பின்னர் பின்னர் நாங்கள் அரசியலை செய்வோம்.நாட்டை கட்டியெழுப்பும் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க நான் அழைப்பு விடுக்கிறேன்.


Post a Comment
Post a Comment