மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இந்திய அணி பேட்டிங்



 


பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இன்று (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளுமே அரையிறுதியில் களமிறக்கிய அதே பிளேயிங் லெவனையே இந்தப் போட்டிக்கும் தேர்வு செய்திருக்கின்றன. மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இவ்விரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை

மழையால் தாமதம்

3 மணிக்குத் தொடங்கியிருக்கவேண்டிய ஆட்டம், நவி மும்பையில் தொடர்ந்து மழை பெயததால் தாமதம் ஆனது. இறுதிப் போட்டிக்கு கூடுதலாக 2 மணி நேர 'கட்-ஆஃப்' (cut off) இருப்பதால், ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாமல் இது முழுமையான 50 ஓவர் ஆட்டமாகவே நடக்கும்.