#Rep/Murasu
பிரதமர்_ஹரிணி_அமரசூரிய
#நிந்தவூருக்கு_விஜயம்
++++++++++++++++++++++++++++++++++++++
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய படசாலையில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய கூட்டத்தில் புதிய சீர்திருத்தம் பற்றி உரையாற்றினார்.
கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவோடு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்கள் அபூவக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக்க ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் நினைவாக பிரதமர் மரக் கன்று ஒன்றினையும் வைத்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்கள் அபூவக்கர் ஆதம்பாவா ஆகியோர்கள் உரையாற்றினார்கள்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றியதோடு, ஆசிரியர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இதே வேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


Post a Comment
Post a Comment