மீதுன்பிட்டிய 207 குடும்பங்களுக்கு உதவிப்பொருட்கள்!





 ( வி.ரி.சகாதேவராஜா)


 பேரிடரால் மோசமாக பாதிக்கப்பட்ட மலையகத்தில் இடம்பெயர்ந்து கோணக்கலை மற்றும் பதுளை மீதுன்பிட்டிய அகதி முகாம்களில் வாழும் 207  குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் முதற்கட்டமாக அத்தியாவசிய பொதிகளை இன்று (8) திங்கட்கிழமை வழங்கி வைத்தது.

 உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ்  இதனை நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.


சுவாமி ஜீ தலைமையிலான குழுவினர்  இதுவரை பசளை மடுல்சீமை பதுளை பிரதேசங்களில் கடந்த ஐந்து நாட்களாக தங்கியிருந்து12 முகாம்களை பார்வையிட்டு அவற்றுள் 8 முகாம்களை பொறுப்பேற்று அவர்களுக்கு
சாரி சரம்பெட் சீட் 
குளிர் கால தொப்பி 
பாய்- மற்றும் 
பெனடால் 
சித்தாலேப்ப ஜீவனி
குழந்தைகள் பால்மா 
மற்றும் 
பெண்களுக்கான உடைகள் போன்ற உடுதுணி நிவாரண பொருட்களை  வழங்கி வருகின்றார்கள்.