#அனர்த்தங்களால் #பாதிக்கப்பட்ட_வழிபாட்டு #தலங்களுக்கு_ரூ.25,000; #அமைச்சரவை_அனுமதி #வழங்கியது
பேரிடர் காரணமாக அனர்தத்திற்குள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வழிபாட்டுத் தலங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேவையான நிதி ஒதுக்கீட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் இதற்குரிய யோசனையை ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவால் சுமார் 764 மதஸ்தலங்கள் சேதமாகியுள்ளதாக புத்த சாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
379 விகாரைகள், 165 கோவில்கள், 63 தேவாலயங்கள் மற்றும் 157 மசூதிகள் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், பேரிடர் சூழ்நிலை காரணமாக பல மாவட்டங்களில் 18 கலாசார மையங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து மதத் தலங்களையும் மீட்டெடுத்து புனரமைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இது பல கட்டங்களில் செய்யப்படும் என்றும், சுத்தம் செய்தல் மற்றும் மத நடைமுறைகளைத் தொடங்குவதற்கான பி,ற ஆரம்பப் பணிகளுக்கு மேற்படி ரூ. 25,000 ஆரம்ப மானியத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.


Post a Comment
Post a Comment