ஜப்பான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு, இலங்கையில்



 


இலங்கை தற்போது எதிர்நோக்கும் அனர்த்த சூழ்நிலையை முன்னிட்டு, நாட்டின் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அவசர மருத்துவ சேவைகளை நேரடியாக ஆராய்வதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு நேற்று (30) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.


இந்த குழுவில் ஐந்து ஜப்பானிய சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் அடங்குகின்றனர்.


இவர்கள் இலங்கையின் தற்போதைய மருத்துவ வசதிகள், அவசர சிகிச்சை திறன், மருந்து மற்றும் உபகரணங்களின் குறைபாடுகள் உள்ளிட்ட பகுதிகளை மதிப்பாய்வு செய்ய இருக்கின்றனர். மேற்கொள்ளப்படும் ஆய்வின் அடிப்படையில், இலங்கைக்கு தேவையான மருத்துவ உதவி, உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவ ஆதரவை வழங்குவது குறித்த அறிக்கை ஜப்பான் சுகாதார