(வி.சுகிர்தகுமார்)
ஜந்து அடி கற்சிலை அமைந்துள்ளதும் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த மருத மரத்தை தல விருட்சமாகவும் கொண்ட அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கல சங்காபிசேக இலட்சாட்சனை நிகழ்வானது இன்று (20ஆம் திகதி) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை நிகழ்வானது கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமாகி ஆஞ்சநேய ஜெயந்தி தினமான இன்று இடம்பெற்ற 108 சத அஸ்டோத்திர கல சங்காபிசேகத்துடன நிறைவுற்றது.
அதிசயம் மிக்க இப்பெருமைமிகு ஆலயமானது குருதேவர் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பூரண ஆசீர்வாதத்துடன் அமைக்கப்பட்டதுடன் ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டலுடன் நடைபெற்று வருகின்றது.
11ஆம் திகதி ஆரம்பமான ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு 20ஆம் வரையான 10 நாட்களுக்கும் காலை மாலை விசேட பூஜைகளுடன் நடைபெற்று வந்தன.
இச்சிறப்புமிகு ஆலயத்தில் இன்று காலை குரு பூஜை நடைபெறுவதுடன் பாற்குடபவனியும் ஆலயத்தை சுற்றி இடம்பெற்றது. பின்னர் ஆஞ்சநேயப்பெருமானுக்கு பாலாபிசேகமும் நடைபெற்றதுடன் விசேட பூஜைகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து விசேட யாகபூஜைகள் ஆரம்பமாவதுடன் யாகபூஜையில் அடியவர்களினால் ஆகுதிகள் சொரியப்படும். பின்னர் பிரதான கும்ப வெளிவீதி உலாவும் இடம்பெற்றது.
வெளிவீதி உலாவாக எடுத்துவரப்படும் பிரதான கும்பம் ஆஞ்சநேய சுவாமி மீது சொரியப்பட்டு 1008 ஆஞ்சநேய மந்திர உச்சாடணமும் அலங்கார பூஜையும் நடைபெற்றதன் பின்னர் பூஜைகள் நிறைவுற்றது.
கிரியைகள் யாவற்றையும் கிரியாகலாநிதி சிவஸ்ரீ புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்கள் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ த.குகனேஸ்வர சர்மா ஆகியோர் நடாத்தி வைத்தனர்.

Post a Comment
Post a Comment