சந்திப்பு



 


அஸ்ஹர் ஆதம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெப்  அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று  20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

​பாடசாலைகளுக்கு மேலதிகமாக பாதிப்புக்குள்ளான முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இதன் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிரதமர் யுனிசெப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.