காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழா



🛑காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழாவில்; ஐந்து கலைஞர்கள் கௌரவிப்பு – ‘ஸம் ஸம்’ மலர் வெளியீடு.!!

– எம்.ரி.எம்.யூனுஸ் 

காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் கலாசார அதிகார சபை, கலாசாரப் பேரவை  இணைந்து ஏற்பாடு செய்த, பிரதேச கலை இலக்கிய விழாவும் கலைஞர் கெளரவிப்பு நிகழ்வும் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத் தலைமையில், காத்தான்குடி அல்-மனார் அறிவியல் கல்லூரி மண்டபத்தில் நேற்று (19) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


கலை, இலக்கிய ஆர்வலர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், கலை இலக்கியத் துறைகளில் பங்களிப்பு செய்த ஐந்து கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 10ஆவது ‘ஸம் ஸம்’ சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


இலக்கியத் துறையில் மெளலவியா சித்தி ஹாஜறா கலீலுர் ரஹ்மான், அறிவிப்புத் துறையில் முஹம்மட் இஸ்மாயில் முஹம்மட் நஸீம், கவிதைத்துறையில் திருமதி அஜிரா கலீல்தீன், நாடகத் துறையில் முகம்மது முஸ்தபா ஸாஹீர் ஹுசைன், பாடல் துறையில் ஆதம்பாவா முஹம்மது இர்பான் ஆகியோருக்கு ‘கலைச் சுடர்’ பட்டம் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ். சில்மியா, கணக்காளர் ஏ.ஆர். அஹமத் முப்லி, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றஊப், கிராம கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வீ. சிந்து உஷா, பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர் எம். இல்மி அஹமட் லெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


நிகழ்வில் ஸம்ஸம் மலரிற்கான நூல் நயவுரையை காத்தான்குடி மத்திய கல்லூரியின் பிரதி அதிபர், கவிஞர் ஏ.எல்.எம். சப்ரி வழங்கியதோடு, சிறப்புரையை சட்டத்தரணி, கவிஞர் முகைதீன் சாலி வழங்கினார்.


மேலும், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதொடு போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.