நூருல் ஹுதா உமர்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான்கு சமய திணைக்களங்களினாலும் விசேட சமய நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன மற்றும் மத, சமய விவகார அமைச்சு சகல திணைக்களங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.
அந்த வகையில் இஸ்லாமிய சமய நிகழ்வின் பிரதான நிகழ்வான துவா பிரார்தனை மற்றும் பிரசங்கம் வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் டிசம்பர் 09ஆம் திகதி பிற்பகல் 3.45 மணிக்கு நடாத்த ஏற்பாடு செய்துள்ளது எனவும் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட் மக்களுக்காகவும் தாய்நாட்டிற்காகவும் வேண்டி விஷேட பிராத்தனைகளை குறித்த தினத்தில் (09.11.2025) மஹ்ரிப் அல்லது இஷா தொழுகையின் பின்னர் அனைத்து பள்ளிவாசல்களிலும் மேற் கொள்ளுமாறு சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் / நம்பிக்கைப் பொறுப்பாளர்களிடம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment
Post a Comment