வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய மாணவர்களுக்காக,நேசக்கரம்



 

Rep/ NoorulHutha.

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய பிரதேசங்களின் மாணவர்களுக்காக முன்னாள் எம்.பி ஹரீஸின் கல்விக்கான நேசக்கரம் வேலைத்திட்டம் தொடங்கியது. 



அண்மைய அனர்த்தத்தில் சிக்கிய மாணவர்களின் கல்விக்கு கரம்கொடுக்கும் நோக்கில் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்விக்கான நேசக்கரம் வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் முதலாம் தொகுதி இன்று திருகோணமலை மாவட்ட மூதூர் கல்வி வலய தி/மூ/ கூபா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


அதனை தொடர்ந்து தி/மூ/ அல்- ஹிலால் கனிஷ்ட பாடசாலை, தி/மூ/ தாருல் ஜன்னா வித்தியாலயம், தி/மூ/அல்- மனார் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளையும் சேர்ந்த 500 மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாச கொப்பிகள், புத்தக பை, கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி வழங்கிவைக்கப்பட்டது. இந்த கற்றல் உபகரணங்களை பொருளாதார நெருக்கடியில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வைக்க பாடசாலை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன . 


இங்கு கருத்து வெளியிட்ட பாடசாலை அதிபர்கள் முழுமையாக பாதிக்கப்பட்ட இந்த பிரதேசத்துக்கு யாரும் கல்விக்காக உதவிக்கரம் நீட்ட இதுவரை முன்வரவில்லை. சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் இந்த உதவியே நாங்கள் பெரும் முதலாவது உதவி. இது மாணவர்களுக்கு பெறுமதியான உதவியாக அமைந்துள்ளது. இதற்காக உழைத்த சகலருக்கும் நன்றிகள் என்றனர். இங்கு பேசிய சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள், இது முதல் கட்ட பணியாகும். தொடர்ந்தும் மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்க கல்விக்கான நேசக்கரம் வேலைத்திட்டம் அடுத்த கட்டங்களை நோக்கி செல்ல இருக்கிறது. மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு எப்போதும் நான் உறுதுணையாக இருந்து வருகிறேன். அந்த பணியை தொடர்ந்து முன்னெடுக்க தயாராக உள்ளேன் என்றார்.


இந்த பணியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வெகுஜன தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா, கல்முனை பொதுப்பணி மன்ற செயலாளர் ஏ.ஏ. மஜீத் (நிஸார்), உப தலைவர் பதூத் முஹம்மட் அடங்களாக கல்முனை பொதுப்பணி மன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் அலுவல இணைப்பாளர் எம். கபீர், சகோதரர் முஹம்மட் ஷாபி உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் இணைந்து கொண்டு பணியாற்றினர்